பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கத்தினால் ரூ.4.80 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான தகவல் களில் பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் காரணமாக இந்திய பொருளாதாரத்தில் ரூ.4.80 லட்சம் கோடி இழப்பு ஏற்பட் டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா நேற்று கூறுகையில், 59 நிமிடத்தில் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் அளிக்கப்படும் என்கிற மத்திய அரசின் முயற்சி மோசடியானது. இந்த திட்டத்தின் கீழ், இந்த இணையதளத்தின் மூலம் நாட்டின் எந்த பகுதியிலிருந்தும் யாராவது ஒருவர் கடன் பெற்றுள்ளனரா என்றும் விமர்சித்தார்.

ஜிஎஸ்டி அமலாக்கத்தின் காரணமாக 2017-ம் ஆண்டு முதல் இப்போதுவரை மாநில அரசின் வருவாய் இழப்பு ரூ.78,929 கோடியாக உள்ளது. இந்த இழப்பினை மத்திய நேரடி வரிகள் விதிகளின் கீழ் மத்திய அரசு இழப்பீடாக அளிக்க வேண்டும்.

மத்திய அரசு ஸ்திரமாக உள் ளது என நம்பச் சொல்கிறது. ஆனால் தவறான முடிவுகளை மேற் கொள்கிறது. தவறான முடிவுகளை யும், தோல்வியளிக்கும் முடிவு களையும் மேற்கொள்கிறது. சிறு, குறு நிறுவனங்களின் மனதில் பொருளாதார தேக்கம் நிலவு கிறது என்கிற மனநிலையை உரு வாக்கியுள்ளது.

இந்திய சர்வதேச ஏற்றுமதி கண் காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மித்ரா இதனைக் கூறினார். விவ சாயிகள் மற்றும் முறைப்படுத் தப்படாத தொழில்களின் உள்ள வர்களின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தினை பணமதிப்பு நீக்கம் ஏற்படுத்தியுள்ளது. அதன் பாதிப்புகள் இப்போது வரை தொடர்கிறது. வளர்ந்த நாடுகளான ஜப்பான், சுவிட்சர்லாந்து நாடுகளை விட இந்தியாவில் ஜிஎஸ்டி சதவீதம் அதிகமாக உள்ளது என்றும் கூறினார்.

பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டியின் காரணமாக இந்திய ஜிடிபியில் ரூ.4.80 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2015-16 முதல் பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ளது என்றார்.