பட விற்பனையில் ரஜினி, விஜய்யை முந்திய சிவகார்த்திகேயன்

0
430
Vijay & Rajinikanth

பட விற்பனையில் ரஜினி, விஜய்யை முந்தியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

ரஜினி, விஜய் படங்களின் விற்பனை விலையைவிட சிவகார்த்திகேயன் படங்களின் விலை குறைவுதான். இங்கே நாம் குறிப்பிடுவது, படம் விற்பனையாகும் வேகம்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை படம் வெளியாகும் போதே விற்பனையாகி வந்தது. பிறகு படம் வெளியாகும் முன்பே அதிக பணம் கொடுத்து வாங்க ஆரம்பித்தனர். சன் தொலைக்காட்சி சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கும் படத்தின் சேட்டிலைட் உரிமையை படத்தை தொடங்கிய அன்றே வாங்கியது. இப்போது அதிலும் முன்னேற்றம். சிவகார்த்திகேயன் பட அறிவிப்பு வெளிவந்த உடனேயே அதன் சேட்டிலைட் உரிமையை சன் வாங்கியிருக்கிறது.

பொன்ராம் இயக்கத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன் அடுத்து இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளிவந்த உடனேயே அதன் சேட்டிலைட் உரிமையை சன் வாங்கியுள்ளது. அதேபோல், ரவிக்குமாருக்கு அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. இதன் ஸ்கிரிப்டே இன்னும் தயாராகவில்லை. அதற்குள் சேட்டிலைட் உரிமை மட்டும் விலைபோகியிருக்கிறது. வாங்கியது… வேறு யார் சன் தொலைக்காட்சிதான்.

ரஜினி உள்பட எந்த நடிகர் படத்தின் சேட்டிலைட் உரிமையும் இப்படி விற்றதில்லை என்பது சாதனை.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

இதையும் படியுங்கள்: உங்கள் பணத்தைத் திருடும் எஃப்.ஆர்.டி.ஐ சட்டம் ஏன் வேண்டாம்? நீங்கள் கேட்ட 5 கேள்விகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்