பட்டினியால் வாடும் லட்சக்கணக்கான ஏழைகள்; பணக்காரர்களுக்கு சானிடைசர் தயாரிக்க ஏழைகளுக்கான அரிசியை ஏற்றுமதி செய்கிறார் மோடி ; விளாசும் ராகுல்

Coronavirus: The govenrment said excess rice in central godowns will be converted into ethanol to make hand sanitisers and will also be added to petrol to reduce emission.

0
677

பணக்காரகள் பயன்படுத்தும் சானிடைசர் தயாரிக்க ஏழைகளுக்கான அரிசியை ஏற்றுமதி செய்கிறது மோடி அரசு . இது குறித்து மோடி அரசு வெளியிட்டுள்ள செய்தியில் மத்திய அரசின் தானிய கிடங்குகளில் இருக்கும் ஏழைகளின் தேவைக்கு போக மீதமுள்ள அரிசியை எத்தனால் தயாரிக்க பயன்படுத்தப்படும்.  அந்த எத்தனால்  சானிடைசர் தயாரிக்கவும் , பெட்ரோலில் கலக்கவும் பயன்படுத்தப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.   

அரசிந் இந்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால்  லட்சக்கணக்கான ஏழைகள் பட்டினியின் விளிம்பில் இருக்கிறார்க்கள். இந்த நேரத்தில் இந்த முடிவு சரியானதல்ல என்று பார்க்கப்படுகிறது. 

கொரோனா வைரஸ் ஒழிப்பில் முக்கியமாகத் தேவைப்படும் சானிடைசர் தயாரிக்க அரிசியை ஏற்றுமதி செய்யும் மத்திய அரசின் முடிவை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி  கடுமையாக விளாசியுள்ளார். 

இந்திய உணவுக் கழகத்திலிருந்து அபரிமிதமாக, உபரியாக இருக்கும் அரிசியை அதாவது ஏழைகளின் தேவைக்கு போக மீதமுள்ள அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து எத்தனால் பெற முடிவு செய்யப்பட்டது. இதற்கான முடிவு தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்புக் குழுவில் நேற்று (திங்கள்கிழமை)  எடுக்கப்பட்டது.

கொரொனா ஊரடங்கால் பல்வேறு மாநிலங்களின் எல்லைகளில் புலம் பெயர் தொழிலாளர்கள் உணவு இன்றி, அரிசியின்றி பசி பட்டினியால் மிகவும் துன்பப்படுகிறார்கள். நாட்டில் லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்கள், கீழ்நடுத்தரக் குடும்பத்தினர் அரிசி கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். 

இது குறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஏழை மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சானிடைசர் தயாரிக்க அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்கிறது 

இந்தியாவில் உள்ள ஏழைகள் எப்போது விழிப்படைவார்கள்? நீங்கள் பசியில் செத்து மடிகிறீர்கள். ஆனால், அவர்கள் பணக்காரர்கள் கைகளைக் கழுவுவதற்காக உங்களுக்காக வைத்திருக்கும் அரிசியை சானிடைசர் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள் என பதிவிட்டுள்ளார். 

மேலும், சானிடைசர் தயாரிக்க அரிசியை ஏற்றுமதி செய்ய அரசு அனுமதித்துள்ளது குறித்த செய்தி வெளியானதையும் ராகுல் காந்தி  தனது டிவிட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here