மோடி தனது நண்பர்களின் பைகளை நிரப்புவதைக் குறிக்கோளாக கொண்டிருக்கிறார்: ராகுல் காந்தி

He was reacting to the Global Hunger Index 2020 report which has ranked India 94 among 107 countries.

0
157

உலக அளவில் அதிக மக்கள் பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 94-வது இடத்தில் உள்ளது.  உலக பட்டினிக் குறியீடு 2020  வெளியிட்ட அறிக்கையில் உலகிலேயே இந்தியாவில்தான் 5 வயதுக்குக் கீழான குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி, பராமரிப்பின்றி இருப்பதாகத் தெரிவித்தது. 2010-14 காலகட்டத்தில் குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி விரயம் செய்யப்படும் சதவீதம் 15.1 சதவீதமாக இருந்தது. 2015-19-இல் இது மோசமடைந்து 17.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதைக் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்தியாவில் ஏழைகள் எல்லாம் பட்டினியோடு இருக்கிறார்கள். ஏனென்றால், மத்தியில் ஆளும் மோடி அரசு தனது சிறப்பு நண்பர்களின் பைகளை நிரப்பிக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், உலக பட்டினிக் குறியீட்டின் வரைபடத்தையும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார். அதில், அண்டை நாடுகளான பாகிஸ்தான் (88), நேபாளம் (73), வங்கதேசம் (75) இடத்தில் இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், உலக மக்களின் பசியைக் குறைத்து முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும், மக்களின் உணவுப் பற்றாக்குறையை மதிப்பிடுவதற்காகவும் `உலகளாவிய பட்டினி மதிப்பீடு’ என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது

2020 -ஆம் ஆண்டு 107 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில், இந்தியா 94-வது இடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆசியாவைப் பொறுத்தவரை அதிகம் பசியால் வாடும் மக்கள் கொண்ட நாடுகளில், இந்தியா மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 -ம் ஆண்டு 117 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது . அதில், இந்தியா 102-வது இடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 

இலங்கை 64-வது இடத்திலும் வங்கதேசம் 75-வது இடத்திலும் பாகிஸ்தான் 88-வது இடத்திலும் , வியட்நாம் 61 வது இடத்திலும், பிலிப்பைன்ஸ் 69 வது இடத்திலும், நேபாளம் 73 வது இடத்திலும், மியான்மர் 78 வது இடத்திலும் , இந்தோனேஷியா 70 வது இடத்திலும் உள்ளது. பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானைவிடப் பின்தங்கிய நிலையில் உள்ளது இந்தியா. ‘உலக அளவில் பசியால் மோசமான நிலையில் வாடும்   நாடுகளின் பட்டியலில்  இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ, எத்தியோப்பியா, அங்கோலா, கென்யா ஆகிய நாடுகள் இந்தியாவை விட முன்னேறிய நிலையில் உள்ளன. இந்தியாவுக்குப் பின்வரிசையில் மொத்தம் 13 நாடுகள் மட்டுமே இருக்கின்றன. அதில் ரவானாடா (97), நைஜீரியா (98), ஆப்கானிஸ்தான் (99), லிபியா (102), மொசாம்பிக் (103), சாட் (107) ஆகிய நாடுகள் உள்ளன.

குழந்தைகளுக்குத் தேவையான சத்துள்ள சரிவிகித உணவு கிடைக்கிறதா என்றும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வயதிற்கு ஏற்ப எடை மற்றும் உயரம் கொண்டிருக்கிறார்களா என்றும் ஆய்வு செய்து, குழந்தைகள் இறப்பு விகிதம் போன்றவற்றை வைத்தும் இந்த பட்டினி குறீயிடு கணக்கிடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here