மோடி யோகப் பயிற்சியெல்லாம் செய்து தன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார். அவருக்கு மக்கள் வயிறு பற்றி கவலை இல்லை என்று காங்கிரஸ் தலைவர் மோடியை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மக்களுக்கு உணவு கிடைப்பதைப் பற்றிக் கவலைப்படாமல், நன்றாகப் பேசுவதிலும், யோகா செய்தவதிலுமே பிரதமர் மோடி ஆர்வமாக இருக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

உலக பட்டினிக் குறியீடு குறித்து சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனம்(ஐஎப்பிஆர்ஐ) மற்றும் வெல்த்ஹங்கர்லைப் ஆகியவை நடத்திய ஆய்வு அறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில் 119 நாடுகளில் இந்தியா 103-வது இடத்துக்குப் பின்தங்கி இருக்கிறது. 2014 ஆம் ஆண்டில் உலகளவில் பட்டினிக் குறியீட்டில் 55 வது இடத்தில் இருந்தது .

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில்

நம் நாட்டின் காவலாளி ஏராளமாகப் பேசுகிறார். ஆனால், மக்களின் வயிற்றைப் பற்றி மறந்துவிட்டார். யோகா பயிற்சிகள் அதிகமாகச் செய்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறார். ஆனால், மக்களுக்கு வயிற்றுக்கு உணவு அளிக்க மறந்துவிட்டார் என்று பதிவிட்டுள்ளார்.

நாட்டின் பட்டினியைப் பற்றி பேச மறந்துவிட்ட மோடி இதுகுறித்து அறிவில்லாமல் இருக்கும் மோடி , மக்களுக்கு உணவு வழங்கும் கொள்கைளை எப்படி வடிவமைப்ப்பார் என்று காங்கிரஸ் தலைவர் அசோக் கெஹ்லாட் கேள்வி எழுப்பியிள்ளார். உலக பட்டினிக்குறியீட்டில் 103 இடத்துக்கு இந்தியா சரிந்துள்ளது வெட்கக்கேடானது. மிகவும் கவலைப்படக்கூடிய இந்த விஷயத்தில் மத்திய அரசு அதிக அக்கறை காட்டவேண்டும்.மோடியும், அவரின் அமைச்சர்களும் ஏழைகள் குறித்தும், பட்டினியால் வாடும் மக்கள் குறித்தும் ஒருபோதும் பேசுவதில்லை. நாட்டில் பட்டினியை ஒழிப்பதற்கான வழியை மத்திய அரசு முதலில் காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

உலக பட்டினிகுறியீட்டில் 119 நாடுகளில் இந்தியாவின் நிலை மிகவும் மோசமாகி 103வது இடத்தில் பின்தங்கியுள்ளது, நாட்டில் 21 சதவீத குழந்தைகள் குறைந்த எடை கொண்டவர்கள் என்றும் உலக பட்டிணி குறியீடு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

அதாவது நாட்டில் 5 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு சரிவிகித சத்தான உணவு இல்லை, அந்தக் குழந்தையும் தனது உயரத்துக்கு ஏற்ற எடைகொண்டதாக இல்லை என்று 2018-ஆம் ஆண்டுக்கான உலக பட்டினி குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான நிலையில், சரிவிகித சத்துணவு இல்லாமல் தெற்கு சூடான் நாட்டில் உள்ள குழந்தைகள் தவித்து வருகின்றனர்.

119 நாடுகளில் இந்தியா 103 இடத்துக்குப் பின்தங்கி ,கடந்த ஆண்டைக் காட்டிலும் 3 இடங்கள் கீழிறங்கியுள்ளது.

பட்டினி குறீயிட்டை கணக்கிடுவதற்கு நான்கு முக்கியக் காரணிகள் கணக்கிடப்படுகின்றன. முதலாவதாக ஒரு குழந்தைக்கு தேவையான சத்துள்ள, சரிவிகித கிடைக்கிறதா அல்லது சத்துள்ள உணவு இல்லாமல் இருக்கிறதா என்பதை அறிவதாகும்.

2-வதாக 5 வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள். அதில் இந்த 5 வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் தங்கள் உயரத்துக்கு ஏற்ப எடை கொண்டிருக்கிறார்களா, தங்கள் வயதுக்கு ஏற்ப உயரத்தைக் கொண்டிருக்கிறார்களா என்பதை அறிவதாகும். இவை இரண்டுக்கும் சரிவிகித சத்துணவு இல்லாமல் இருப்பது காரணமாகும். இறுதியாகக் குழந்தை இறப்பு. இந்த 4 காரணிகளால் கணக்கிடப்படுகிறது.

குழந்தைகளின் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருக்கும் குறைபாடு என்பது தெற்காசியாவில் பரவலாக இருக்கிறது, இது உடனடியாக கவனத்தில் கொண்டு களையப்பட வேண்டிய விஷயம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்தக் குறைபாட்டை சிறுவயதில் இருந்தே தடுக்க குழந்தைகளுக்குத் தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுதலைக் கட்டாயப்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல், பெண்கள் தங்களின் பேறுகாலத்தில் போதுமான சத்துள்ள உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாலும், குழந்தை பிறந்தபின் தாய்ப்பால் முறையாகக் கொடுக்காமல் இருப்பதாலும் இந்த வயதுக்கு ஏற்ற எடை இல்லா குழந்தைகள் உருவாக காரணமாகக் கூறப்படுகிறது.

ஏழ்மையை நிலையைக் குறைப்பதால் மட்டும் இந்தக் குறைபாட்டை நீக்கிவிட முடியாது. மாறாக, குழந்தைகளுக்கும், மகப்பேற்றில் உள்ள பெண்களுக்கு சத்துள்ள, சரிவிகித உணவு கிடைப்பதை உறுதி செய்தல், சுத்தமான கழிப்பிட வசதிகள் செய்தல், பெண் கல்வி, பாதுகாப்பான குடிநீர், பாலின சமத்துவம், நாட்டில் போதுமான உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here