நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைவிதிக்கக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.

நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கினால் பட்டாசுக்கு தடை விதிக்கப்படலாம் என எழுந்த அச்சம் காரணமாக, பட்டாசுக்கு சுற்றுப்புறச் சூழல் விதிகளிலிருந்து விலக்க மத்திய அரசை வலியுறுத்தி, கடந்த சில தினங்களுக்கு முன்னர், விருதுநகர் மாவட்ட பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜன.19ஆம் தேதியன்று, பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இது தொடர்பாக மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தரப்படும் என அவர் உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் தங்களது போராட்டத்தினை வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கில், தமிழக அரசு இடைக்கால மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது. அதில், நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைவிதிக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்