உச்சநீதிமன்றத்தின் தடை உத்தரவால் பட்டாசு வெடியால் ஏற்படும் விபத்துகள் 16 சதவிகிதம் குறைந்துள்ளதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

1. உலக அளவில் மாசடைந்து வரும் நகரங்களின் பட்டியலில் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளது.

2. கடந்த அக்.9ஆம் தேதியன்று, டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற நகர் பகுதிகளில் வரும் நவ.1ஆம் தேதி வரை பட்டாசு விற்பனை மற்றும் பட்டாசுகளை வெடிக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

supremecourt

3. கடந்த வருடம் தீயணைப்புத் துறையின் அவரச எண்ணிற்கு 242 அழைப்புகள் வந்துள்ளதாகவும், அது இந்தாண்டில் 204ஆக குறைந்துள்ளது என்றும் டெல்லி தீயணைப்புத் துறையின் இயக்குநர் ஜி.சி.மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

4. உச்சநீதிமன்றத்தின் உத்தரவினால், இந்த வருடம் தீ விபத்துகள் தொடர்பான அழைப்புகள் 50 சதவிகிதம் குறைந்து விடும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் 16 சதவிகிதமே இது குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

5. தீபாவளி தினத்தன்று நள்ளிரவு 12 மணி முதல் காலை ஏழு மணி வரை குறைவான அழைப்புகளே வந்ததாகவும், இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் 120க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: டெங்குவா? நீங்கள் என்ன செய்ய வேண்டும்? மருத்துவ அவசர நிலையை ஏன் அறிவிக்க வேண்டும்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்