பட்டதாரி அங்கிகளுடன் பக்கோடா விற்றவர்கள் கைது ; மோடிக்கு எதிராக நூதன போராட்டம்

0
167

சண்டிகரில் பட்டதாரி அங்கிகளுடன் பக்கோடாவை கையில் ஏந்தியபடி   மோடிஜியின் பக்கோடா என்று விற்பனை செய்தனர்.   பிரதமர் மோடியின் பிரச்சாரக் கூட்டம் நடைபெறும்  இடத்தில் இந்தப்  போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆனால்  விற்க கொண்டு வந்த பக்கோடாக்களை அவர்களால் விற்க முடியவில்லை. மோடியின் பிரச்சாரம் தொடங்குவதற்குமுன் அவர்களை போலீஸார் கைது செய்தனர். 

மோடி ஒரு பேட்டியின் போது ஒருவர் பக்கோடா விற்று அன்றைய தினம் ரூ200 சம்பாதிப்பதும்  வேலைதானே என்றார். இதனை எதிர்த்தே பட்டதாரி அங்கிகளுடன் பக்கோடா விற்றனர் இந்தப் போராட்டக்காரர்கள். மோடியின் பக்கோடா பேச்சை  எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர். 2014 தேர்தலின்போது , ஒவ்வொரு வருடமும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைத் தெருவேன் என்று மோடி கூறியிருந்தார்.  

என்ஜினியர்கள் செய்த பக்கோடாவை வாங்குங்கள், பிஏ, எல் எல் பி செய்த  பக்கோடாவை வாங்குங்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பக்கோடாவை விற்றனர் . போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் , மோடிஜி எங்களுக்கு சிறப்பு பக்கோடா விற்பனை திட்டத்தின் கீழ் வேலை தந்துள்ளார் . அதனால்தான் எங்களுடைய நன்றியை மோடிக்கு தெரிவிக்கவே நாங்கள் இங்கு வந்தோம் என்று கூறினார். படித்தவர்களுக்கு இதைவிட சிறந்த வேலை என்ன இருக்கிறது என்றும் அவர் கூறினார்.  

பாஜக அரசு நாட்டில் நிலவி வரும் வேலைவாய்ப்பின்மையை பற்றி பேசவே இல்லை. அதைப்பற்றி கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை.  

இது குறித்து  கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மோடியின் ஆட்சியில் மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா என்ற திட்டங்கள் இருந்தும் இந்திய நாட்டின் இளைஞர்களிடம் பக்கோடா விற்க சொன்னார் மோடி. இது வருத்தப்பட வேண்டிய விசயம் இது என்று கூறியுள்ளார்.

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் எல்லோரும் பக்கோடா விற்றால் நாம் எல்லாரும் நொறுக்குதீனி மட்டுமே சாப்பிடும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்று கிண்டலாக கூறியுள்ளார்.    

முன்னாள் நிதி  அமைச்சர் ப சிதம்பரம் பிச்சை எடுப்பதும் வேலைதானே என்று கூறியிருந்தார். 24 மணிநேரத்தில் 27 ஆயிரம் இளைஞர்கள் வேலையிழக்கும் சூழல் நிலவுகிறது இந்தியாவில் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. 1970 களுக்கு பிறகு வேலையின்மை 6.1 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதம் வெளியான தகவலின்படி , நவம்பர் 8, 2016 இல்  மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குபின்  50 லட்சம் பேர் தங்களது வேலையை இழந்துள்ளனர்.  

பிரதமர் மோடி பாஜக வேட்பாளர் கிரண் கெர் – க்காக பிரச்சாரத்திற்கு போவதற்கு முன்தான் இந்த பக்கோடா போராட்டம் நடந்தது . 

 

ndtv

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here