பட்ஜெட்

”அம்மா” வழியா?

0
412
முதலமைச்சர் எடப்பாடியுடன் ஜெயலலிதா படத்துடன் கூடிய பட்ஜெட் ஆவணத்தை ஏந்திய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

அம்மாவின் வழியில் நடக்கவில்லையென்றால் ஆர்கே நகர் (டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்) தொகுதிபோல அனைத்துத் தொகுதிகளிலும் மக்கள் தோற்கடித்து விடுவார்கள் என்பது
துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்துக்குப் புரிந்திருக்க வேண்டும்; போன பட்ஜெட்டைவிட இந்த பட்ஜெட்டில் அம்மா வாசம் தூக்கலாக இருக்கிறது. 500, 1000 ரூபாய் ஒழிப்பும் ஜிஎஸ்டியும் (சரக்கு சேவை வரி) தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தைத் தள்ளாட வைத்திருக்கிறது என்பதைத் திரும்பத் திரும்ப சுட்டிக் காட்டியிருக்கிறார். “சாராயத்தை வித்துப் பிழைச்சுக்கோ” என்று மத்திய அரசு தண்ணீர் தெளித்து விட்டது மாதிரி கையறு நிலையில் ஒரு பட்ஜெட் வாசித்திருக்கிறார் ஓபிஎஸ்.

மாநிலங்களின் தன்னாட்சியையும் நிதி சுதந்திரத்தையும் அறவே மதிக்காத எதேச்சதிகார மத்திய அரசின் முன் மண்டியிட்டு சாதித்து விடலாம் என்று ஒரு வருடம் இருந்த பின்னர் கொஞ்சம் புரிந்திருக்கிறது; ஜனநாயகத்தில் எதையும் மக்களின் வலிமையால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதே அடிப்படைப் பாடம்; மக்கள் நல அரசு என்கிற ஜெயலலிதாவின் பாதையில் செல்வதற்கான சொற்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. அது செயலில் இடம்பெறாவிட்டால் மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானதாக இந்த அரசு திகழாது.

ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்