பட்ஜெட் விலை: 64 எம்பி குவாட் கேமரா: விரைவில் அறிமுகமாகிறது கேலக்ஸி எஃப்41

Samsung is likely to launch its new Galaxy F series soon in the Indian market as a user manual was recently posted on Samsung India’s support page.

0
125

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஃப்41 ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

தற்போதைய தகவல்களின்படி புதிய ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், FHD+ ஸ்கிரீன், எக்சைனோஸ் 9611 பிராசஸர், 6 ஜிபி ரேம், கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. 

முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், பின்புறம் கைரேகை சென்சார், இன்ஃபினிட்டி யு டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

Ei-A5g-UXVo-Ac-T21c EiFsd6tVoAMiyBo EiFseHfUcAEW7Yv

புதிய கேலக்ஸி எஃப்41 மாடலில் 64 எம்பி பிரைமரி கேமரா, 32 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் புதிய கேமரா அம்சங்கள் வழங்கப்படும்என தெரிகிறது. மேலும் இதில் 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

சாம்சங் கேலக்ஸி எஃப்41 சிறப்பம்சங்கள்:

 • 6.4 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
 • ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
 • மாலி-ஜி72எம்பி3 ஜிபியு
 • 6 ஜிபி LPDDR4x ரேம்
 • 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ
 • டூயல் சிம் ஸ்லாட்
 • 64 எம்பி பிரைமரி கேமரா
 • அல்ட்ரா வைடு + டெப்த் / மேக்ரோ சென்சார்
 • 32 எம்பி செல்ஃபி கேமரா
 • பின்புறம் கைரேகை சென்சார்
 • 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
 • எஃப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
 • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
 • யுஎஸ்பி டைப்-சி
 • 6000 எம்ஏஹெச் பேட்டரி
 • ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்தியாவில் செப்டம்பர் கடைசி வாரம் அல்லது அக்டோபர் மாத துவக்கத்தில் சாம்சங் கேலக்ஸி எஃப்41 அறிமுகமாகும் என தெரிகிறது.

Ei-D2o-K2-UMAA-CDr

இதன் விலை ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here