இந்தியாவில் ஒப்போ நிறுவனத்தின் புதிய ஒப்போ ஏ11 கே ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்துள்ள புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஒஎஸ் இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 6.2 இன்ச் ஹெச்டி பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச், கார்னிங் கொரில்லா கிளாஸ்3, ஆக்டா-கோர் மீடியா டெக் ஹீலியோ பி35 பிராசஸர், 2 ஜி.பி ரேம்ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.

கேமராவைப் பொறுத்தவரை13 எம்.பி பிரைமரி கேமரா, 2 எம்.பி இரண்டாவது கேமரா மற்றும் 5 எம்.பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார், பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்டி ஸ்லாட், 4230 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ11 கே சிறப்பம்சங்கள்:

6.22 இன்ச் 1520×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச்

கார்னிங் கொரில்லா கிளாஸ் 3

ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்

IMG PowerVR GE8320 GPU

2 ஜி.பி ரேம்

32 ஜி.பி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஒஎஸ் 6.1

13 எம்.பி பிரைமரி கேமரா, f/2.2

2 எம்.பி இரண்டாவது கேமரா, f/2.4

5 எம்.பி செல்ஃபி கேமரா, f/2.4

டூயல் சிம்

கைரேகை சென்சார்

3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ

4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

மைக்ரோ யுஎஸ்பி போர்ட்

4230 எம்ஏஹெச் பேட்டரி

ஃபுளோவிங் சில்வர் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கும் ஒப்போ ஏ11 கே ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.8990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here