ஜியோமி நிறுவனத்தின் முதல் அண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் தயாரிப்பான ரெட்மி கோவை இந்தியாவில் வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ரெட்மி கோ தயாரிப்பு இந்தியாவில் வரும் மார்ச் 19 ஆம் தேதி அறிமுகபடுத்தப்படும் எனத் தெரிகிறது வருகிறது.

ஸ்னாப்டிராகன் 425 SoC, 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரியுடன் வெளிவருகிறது. இந்த புதிய போன் ஒரு ஆரம்ப நிலை ஸ்மார்ட்போன் ஆகும். இதன் மூலம் பலரும் ஒரு ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் வாய்பைப் பெறுவார்கள்.

5 இஞ்ச் ஹெச்டி திரை மற்றும் டூயல் சிம் கார்டு ஸ்லாட் வசதி என ஸ்மார்ட்போனின் அடிப்படை வசதியுடன் இந்த ரெட்மி கோ வருகிறது. குவாட்-கோர் குவல்கம் ஸ்னாப்டிராகன் 425 SoC மற்றும் 1ஜிபி ரேம் மேலும் 8 மற்றும் 16 ஜிபி மெமரியுடன் இரு வெரியண்ட்களில் வெளியாகிறது.

இந்த போனில் 8 மெகா பிக்சல் பின்புற கேமராவும் செல்ஃபிக்காக 5 மெகா பிக்சல் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் ஹெச்டிஆர் மோட், பர்ஸ்ட் மோட் மற்றும் பல முக்கிய ஃபில்டர்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 128 ஜிபி வரை மெமரியை அதிகரித்துக் கொள்ளலாம்.

ப்ளூடூத் 4.1 கனெக்டிவிட்டி, 3,000mAh பேட்டரி ஆகியவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது. ரெட்மி கோ ஸ்மார்ட்போன் கறுப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கும்.

இந்தியாவில் ரெட்மி கோ ஸ்மார்ட்போன் ரூ.5,000க்கு குறைவான விலையிலையே விற்பனை செய்யப்படும் என எதிர்பார்கப்படுகிறது.

Mi.com தளத்தில் இது குறித்து பல டீசர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here