நாளுக்கு நாள் அதிக விலையில் புதிய வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன்கள் பல வெளிவந்தவண்ணம் உள்ளன. ஆனால் அதிக விலை கொடுத்து வாங்கும் இந்த ஸ்மார்ட் போன்களில் பல, பேட்டரி நீடித்து நிற்கும் வகையில் இல்லை. தொடர்ந்து பயன் படுத்தினால் சில மணி நேரங்களிலேயே பேட்டரி சார்ஜ் காலியாகிவிடுகிறது. மொபைல்களின் பேட்டரிகள் வாடிக்கையாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போய்விடுகின்றன.

இதனால் பேட்டரியில் சார்ஜ் நீண்டு நிற்கும் செல்போன்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் விலையும் மலிவான போன்களே அதிக விற்பனையாகிறது. வாடிக்கையாளர்களின் இந்த இரண்டு அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் தற்போது மோட்டோ நிறுவனம் மோட்டோ இ5 மற்றும் மோட்டோ இ5 ப்ளஸ் என இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது.

மோட்டோ நிறுவனம் வெளியிட்டிருக்கும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களான இ5 மற்றும் இ5 ப்ளஸ் என்ற இரண்டு புதிய மாடல்களில் உள்ள சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.

மோட்டோ இ5 ப்ளஸின் விலை ரூ.11,999 ஆகும். இது தற்போது ஆன்லைன் சந்தைகளில் விற்பனைக்கு உள்ளது. அனைத்து செல்போன் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

002

மோட்டோ இ5 ப்ளஸ்

ஆண்ட்ராய்ட் 8.0 ஓரியோவுடன் வெளியாகியுள்ள இதில், 6 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு சிம் கார்டுகள் பொருத்த முடியும். 3 ஜிபி ரேம் உடன், குவாட் கோர் 1.4 GHz கார்டெக்ஸ்-ஏ53 ப்ராசெஸர் இணைக்கப்பட்டுள்ளது. 32 ஜிபி உள் நினைவகமும் (Internal Storage), கூடுதலாக 128 ஜிபி மைக்ரோ கார்டும் இந்த ஸ்மார்ட்போனில் இணைக்க இயலும்.

810l6MjIawL._SL1500_

இதன் பின்புறத்தில் LED ஃப்ளாஷ்சுடன்(LED flash)12 எம்.பி கேமராவும், முன்புறம் 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5000 எம்.ஏஹெச் திறன் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

61Rob2tv-mL

மோட்டோ இ5

மோட்டோ இ5-ன் விலை ரூ.9,999 ஆகும். இதில் ஆண்ட்ராய்ட் 8.0 ஓரியோ மற்றும் 5.7 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே உள்ளது. 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள் நினைவகமும் (Internal Storage)இணைக்கப்பட்டுள்ளது.

617LseLLcVL

இந்த ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில் கூடுதலாக 128 ஜிபி மைக்ரோ கார்டு பொருத்த முடியும். பின்புறம் 13 எம்.பி கேமராவும், 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இதில் 4000 எம்.ஏஹெச் திறன் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here