ஹூவாவே நிறுவனத்தின் பாப்-அப் கேமராவுடன் கூடிய புதிய ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ஹூவாவே வை9 பிரைம் 2019 என்ற பெயரில் அறிமுகமாகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

முன்னதாக ஹூவாவே நிறுவனம் ஐரோப்பாவில் அறிமுகம் செய்த ஹவாய் பி ஸ்மார்ட் இசட் ஸ்மார்ட்போன்தான் இந்தியாவில் வை9 பிரைம் 2019 என்ற பெயரில் அறிமுகம் அறிமுகமாகிறது என கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.59 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் TFT LCD ஸ்கிரீன், ஆக்டா கோர் கிரின் 710 12 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமராவும், முன்புறம் டூயல் செல்ஃபி கேமராவும் வழங்கப்படுகிறது. இதில் 16 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்.பி. டெப்த் சென்சாரும், முன்புறம் 16 எம்.பி. ஃபிக்சட் ஃபோக்கஸ் பாப்-அப் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் ஹூவாவே வை9 பிரைம் 2019 மாடலின் விலை ரூ. 20,000க்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here