டெக்னோ மொபைல்(TECNO Mobile), கேமான் ஐ4(Camoni4) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமராக்கள் (13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா-வைடு சென்சார்) வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்  6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டாட் நாட்ச் 19.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட டிஸ்ப்ளேயுடன் வருகிறது. மேலும் மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட், 2 ஜி.பி., 3 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதன் 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. / 64 ஜி.பி. மெமரி வெர்ஷனில் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் உள்ளது. 

இது ஹை ஓ.எஸ். 4.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.மேலும் டூயல் சிம் ஸ்லாட் வசதியும் உண்டு.

செல்ஃபி எடுக்க முன்புறம் 16 எம்.பி. கேமரா, 6லெவல் ஏ.ஐ. பியூட்டி மோட் கொடுக்கப்பட்டுள்ளது. ஏ.ஐ. சார்ந்து இயங்கும் ஃபேஸ் அன்லாக் வசதி மற்றும் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் 4ஜி வோல்ட்இ, 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், அக்வா புளு, நெபுளா பிளாக் மற்றும் ஷேம்பெயின் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.9,599 என்றும், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.10,599 என்றும் ஹீலியோ பி22 பிராசஸர் கொண்ட 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.11,999 க்கும் விற்பனை செய்யப்படும்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here