உடல்நல குறைவு காரணமாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடைக்கால நிதியமைச்சரை நியமித்திருக்கிறார் குடியரசு தலைவர்.

பியூஷ் கோயல் தற்போது மத்திய ரயில்வே அமைச்சராக இருந்து வருகிறார்.

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இடைக்கால நிதியமைச்சராக ரயில்வே அமைச்சராக இருக்கும் பியூஷ் கோயலை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மத்திய பட்ஜெட் வரும் 1-ம்தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இதனை மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அதுதொடர்பான உரையை வாசிப்பார். இதற்கிடையே உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிதியமைச்சர் அருண் ஜெட்லி அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். 

அவருக்கு முன்னதாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் காரணமாக அடிக்கடி அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்ய அவர் இந்தியா வருவார் என்று தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. இதில் திடீர் திருப்பமாக தற்போது இடைக்கால நிதியமைச்சர் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

இதுகுறித்து குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

பிரதமரின் அறிவுரைப்படி அருண் ஜெட்லி வகித்து வந்த நிதியமைச்சர் பொறுப்பை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தற்காலிகமாக கவனிப்பார். அருண் ஜெட்லி நிதியமைச்சராக பொறுப்பு ஏற்கும் வரையில் நிதித்துறை பியூஷ் கோயலிடம் இருக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Courtesy: NDTV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here