லாவா நிறுவனம் தனது புதிய இசட்93 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதியஇசட்93 ஸ்மார்ட்போன் முன்னர் விற்பனைக்கு வந்த இசட்92 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

புதிய லாவா இசட்93-ல் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 6.22 இன்ச் ஃபுல்வியூ டிஸ்ப்ளே, டியூ டிராப் நாட்ச் மற்றும் 1520×720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி, கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, ஸ்மார்ட்ஏ.ஐ. கேமிங்மோட், ஆக்டா-கோர் பிராசஸர் உள்ளிட்ட அம்சங்களுடன் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. + 2 எம்.பி. டூயல் கேமரா சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8 வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 8 எம்.பி. செல்ஃபிகேமரா, சாஃப்ட்ஃ பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 6 லெவல்ஏ.ஐ. போட்டோஸ் டூடியோ, ப்ரோமோட் பானரோமா, ஏ.ஆர். ஸ்டிக்கர் மற்றும் ஹெச்.டி.ஆர். மோட்வ ழங்கப்பட்டுள்ளது.

லாவா இசட்93 ஸ்மார்ட்போன் சார்கோல் புளு மற்றும் ராயல் புளு என இருவண்ணங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 7,999 க்கு கடைகளில் கிடைக்கும்