படப்பிடிப்பில் ஹிப் ஹாப் ஆதி காயம்

0
118

காரைக்காலில் நடந்த படப்பிடிப்பில் இடது கையில் நடிகர் ஹிப் ஹாப் ஆதிக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.

இசையமைப்பாளராக அறிமுகமாகி மீசைய முறுக்கு படத்தில் இயக்குனர், நடிகர் என மேலும் இரு பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார் ஆதி. படம் ஹிட்டாகவே, அப்படத்தை தயாரித்த சுந்தர் சி. ஆதியின் இரண்டாவது படத்தையும் தானே தயாரிக்கவிருப்பதாக தெரிவித்தார். அவர் அறிவித்தபடி ஆதி நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சில வாரங்கள் முன் தொடங்கியது.

ஹாக்கி விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படத்தின் படப்பிடிப்பு காரைக்காலில் நடந்த போது ஆதியின் இடது கையில் அடிபட்டிருக்கிறது. அடிப்பட்ட கையுடனே கலகலப்பு 2 படத்தின் பிரஸ்மீட்டில் ஆதி கலந்து கொண்டார்.

சுந்தர் சி. இயக்கியிருக்கும் கலகலப்பு 2 படத்துக்கு ஆதி இசையமைத்துள்ளார் என்பது முக்கியமானது.

இதையும் படியுங்கள்: யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 921 என்கவுண்ட்டர்கள்; 10 மாத ஆட்சியில் 9 நோட்டீஸ்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்