தயாரிப்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது ஆன்லைன் பைரஸி. படம் வெளியாகும் அன்றே இணையத்தில் படத்தை திருட்டுத்தனமாக பதிவேற்றிவிடுகிறார்கள். இதனால் படங்களின் வசூல் கணிசமாக குறைகிறது. இதனைத் தடுக்க ஏற்கனவே சட்டம் இருருக்கிறது. அதனை மேலும் கடுமையாக்க உள்ளது மத்திய அரசு.

படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றினால் 3 வருடங்கள் சிறைத்தண்டனை அல்லது 10 லட்சம் அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும் எனும் புதிய சட்டத்தை மத்திய அரசுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

இந்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here