டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு ஏற்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக தலைநகர் டெல்லியில் சுப்ரீம் கோர்ட் அமைத்த சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு ஆணையம் பொது சுகாதார அவசரநிலையை பிறப்பித்தது.

இந்நிலையில், டெல்லியை சுற்றியுள்ள உத்தர பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட எல்லைப்புற பகுதி விவசாயிகள் தங்கள் நிலத்தில் அறுவடைக்கு பிறகு காய்ந்த சருகுகளை எரிப்பதால் பெருமளவு காற்று மாசு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விவசாயிகள் நிலத்தில் சருகுகளை எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாபில் வயல்வெளிகளில் காய்ந்த சருகுகளை எரித்ததாக 2,923 விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசு குறியீடு உச்ச அளவை தொட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த டெல்லி அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லி மற்றும் என்சிஆர் மண்டலத்தில் வரும் 5 ஆம் தேதி வரை கட்டிடப்பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here