பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு 2017-18ஆம் ஆண்டில் நடைபெற்றதாக சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையொன்றில் 11,400 கோடி ரூபாய் வரை முறைகேடாக பரிவர்த்தனை நடைபெற்றதாக, அந்த வங்கியின் நிர்வாகம் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு தகவல் தெரிவித்தது. மேலும் சிபிஐயிடம் புகாரும் அளித்தது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட வைர வியாபாரியான நீரவ் மோடி, மீது அமலாக்கத்துறையினர் மற்றும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் நீரவ் மோடியின் மனைவி அமி மோடி, சகோதரர் நிஷால் மோடி, அவரது உறவினர் மெஹூல் சோக்ஸி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த முறைகேடு குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜகவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுக்கும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் ஆட்சியின்போது தான் நீரவ் மோடியின் வங்கி மோசடி தொடங்கி நடந்ததாகவும், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால் இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், 2017-18ஆம் ஆண்டில்தான் இந்த முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: news18.com

இதையும் படியுங்கள்: எழுதப் படிக்க கஷ்டப்படுகிறதா குழந்தை? இதைப் பாருங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here