பஞ்சாப் நேஷனல் வங்கியின் முறைகேட்டின் தொகை உயர்ந்துகொண்டே செல்கிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பிராடி ஹவுஸ் கிளையில் 12,600 கோடி ரூபாய் வரை கடன் மோசடி நடைபெற்றது. இது தொடர்பாக சிபிஐயிடம் வங்கி நிர்வாகம் புகாரும் அளித்தது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட வைர வியாபாரியான நீரவ் மோடி, மீது அமலாக்கத்துறையினர் மற்றும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் நீரவ் மோடியின் மனைவி அமி மோடி, சகோதரர் நிஷால் மோடி, அவரது உறவினர் மெஹூல் சோக்ஸி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கீதாஞ்சலி ஜெம்ஸ் குழுமத்துக்குச் சொந்தமான அஸ்மி ஜூவல்லரி என்னும் நிறுவனம் 942.18 கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்டதாக மேலும் ஒரு வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது. இதனால் பஞ்சாப் நேஷனல் வங்கியின் முறைகேடு 13,640 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்