பஞ்சாப் மாநில அமைச்சர், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர்கள் பணி நியமனத்தின்போது பூவா, தலையா போட்டு ஆட்களைத் தேர்வு செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர்கள் பணிக்கான தேர்வில் 36 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதில் இரண்டு பேர் ஒரே இடத்திற்கு போட்டி போட்டனர். இதில் தீர்வு காண்பதற்கு, அம்மாநில தொழில்நுட்ப கல்வி அமைச்சர் சரண்ஜித்சிங் என்பவர், இரண்டு பேரையும் அழைத்து நாணயத்தைச் சுண்டி பூவா தலையா போட்டு பார்த்து, அவர்களில் ஒருவரைத் தேர்வு செய்தார்.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்