’பஞ்சமி நிலத்தை மீட்க அரசு விரைந்து செயல்பட வேண்டும்’

0
432

தலித் மக்களுக்கென வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து அவற்றை மீண்டும் அவர்களிடமே ஒப்படைப்பதற்காக நியமிக்கப்பட்ட மூவர் குழு ஆணையம், பணிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்நீதிமன்ற உத்தரவின் படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், வருவாய்த் துறைச் செயலாளர் மற்றும் ஆதிதிராவிட நலத்துறைச் செயலாளர் ஆகியோரைக் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. இதற்கு முன் அமைக்கப்பட்ட சோமசுந்தரம் குழு, மருதமுத்து ஆணையம் ஆகியவை செயலிழந்ததைப்போல் இந்த மூவர் குழுவும் செயலிழந்துவிடாமல் பஞ்சமி நிலங்களை மீட்கவும், உரிய பயனாளிகளுக்கு ஒப்படைக்கவுமான பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்