பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத்தை மத தீவிரவாத அமைப்புகள் என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ (CIA) வேர்ல்ட் ஃபேக்ட்புக்கில் (World Factbook) குறிப்பிட்டுள்ளது.
பஜ்ரங் தளம் இந்த வேர்ல்ட் ஃபேக்ட்புக்கில் இருந்து தங்கள் பெயரை நீக்க சட்டபூர்வமாக அணுக முடியுமா என்று ஆராய்ந்து வருகிறது. இதை எதிர்கொள்ள நாங்கள் சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று வருகிறோம் என்று ஹிந்துத்துவா குழுவின் தலைவர் மனோஜ் வர்மா “தி பிரின்ட்” நாழிதளிடம் கூறியுள்ளார்.
Courtesy : www.cia.gov
பஜ்ரங் தளத்தின் ஒரு தலைவர் சிஐஏவின் கொள்கைகளைப் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். எங்களுக்கு சர்வதேச கிளைகள் உள்ளன, ஆனால் நாங்கள் யாரையும் தொந்தரவு செய்யவில்லை என்றும் நாங்கள் தேசியவாதிகள், எங்களுக்கு அவர்கள் அளித்திருக்கும் பெயரை சரிசெய்ய என்ன செய்ய முடியும் என்று பார்ப்போம் என்று “தி பிரின்ட்” நாழிதளிடம் கூறியுள்ளார்.
அந்த “வேர்ல்ட் ஃபேக்ட்புக்கில்” காஷ்மீரில் இருக்கும் ஹூரியத் அனைத்துக்கட்சியை பிரிவினைவாத குழு என்றும் , ஆர் எஸ் எஸ்ஸை தேசியவாத அமைப்பு என்றும் ஜாமித் உலேமா-இ ஹிந்தை மத அமைப்பு என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த “வேர்ல்ட் ஃபேக்ட்புக்” ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு நாடுகளைப் பற்றிய வரலாறு , மக்கள், அரசு , பொருளாதாரம் , புவியியல், தகவல் தொடர்பு, போக்குவரத்து துறை, ராணுவம், நாடுகள் எதிர்கொள்ளும் பன்னாட்டு பிரச்சினைகள் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது
Courtesy : scroll.in