பஜாஜ் நிறுவனம் பல்சர் 150 நியான்(Pulsar 150 Neon) இரு சக்கர வாகனத்தின் எரிபொருள் கலன் அமைந்துள்ள முன்பக்கத்தை சிறியளவில் விரிவாக்கம் செய்து தற்போது விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

பட்ஜெட்டுக்குள் அடங்கும் படி சக்தி வாய்ந்த, அதே சமயத்தில் மிடுக்கான தோற்றத்தில் வெளியாகியுள்ள பல்சர் 150 நியான் மாடலுக்கு பட்ஜெட் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இதை உறுதிசெய்யும் விதமாக பல்சர் சீரிஸில் உள்ள வண்டிகளுக்கு அவ்வப்போது அப்டேட்டுகளை வழங்கி பஜாஜ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வருகிறது. அதன்படி, 150 பல்சர் நியான் வண்டியின் மிடுக்கான தோற்றம் மேலும் மெருகேற்றப்பட்டுள்ளது.

அதாவது, இந்த வண்டியின் எரிபொருள் கலன் அமைந்துள்ள முன்பக்க பகுதியில் கூடுதலான எக்ஸ்டன்ஷன் (விரிவாக்கம்) வழங்கப்பட்டுள்ளது. இதை தவிர, வண்டியின் செயல்திறன், மெக்கானிக்கல் அம்சங்கள், செயல்பாடு உள்ளிட்டவற்றில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

மேலும், இந்த அப்டேட் காரணமாக பல்சர் 150 நியான் விலையிலும் எந்த மாற்றமும் இல்லை என பஜாஜ் நிறுவனம் தகவல் கூறுகிறது. அதன்படி, இந்த வண்டியை ரூ. 72000 (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) மதிப்பிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

பல்சர் சீரிஸ் வண்டிகளில் மிகவும் மலிவான மாடலாக 150 பல்சர் நியான் விளங்குகிறது. முன்னதாக, பல்வேறு வாகன நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புகளின் விலை உயர்த்தி அறிவிப்புகளை வெளியிட்டன.

அப்போது பஜாஜ் நிறுவனம் பல்சர் 150 நியான் பைக்கின் விலை ரூ. 4 ஆயிரம் வரை உயர்த்தியது. அதனால் இதனுடைய எக்ஸ்-ஷோரூம் மதிப்பிலான விலை ரூ. 75,200-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

எனினும், இந்த விலையில் கிடைக்கும் சிறந்த செயல்திறனை வழங்கும் மாடலாக பல்சர் 150 நியான் வண்டி அமைந்திருக்கிறது.

இதனால் பட்ஜெட் விலைக்குள் அடங்கும் சிறப்பான செயல்திறனை வழங்கும் வண்டிகளுக்கான வரிசையில் பல்சர் 150 நியான் மாடலுக்கு வரவேற்பு தொடர்கிறது. இதே செக்மெண்டில் இந்த வாகனம் வழங்கும் வசதிகளை வேறு எந்த பைக்குகளும் வழங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் தொடர்ந்து இரண்டு மாதங்களாக 40 ஆயிரம் யூனிட் பல்சர் 150 நியான் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நியான் சில்வர், நியான் சிவப்பு, நியான் எலுமிச்சை பச்சை ஆகிய 4 வண்ணங்களில் இந்த வண்டி விற்பனை செய்யப்படுகிறது.

149.5சிசி இழுவைத் திறன் கொண்ட இந்த வண்டியின் எஞ்சின் 14 குதிரை திறன் மற்றும் 13.4 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும்.

பல்சர் வரிசையில் மற்றொரு மலிவு விலை மாடலாக் 125 பல்சர் நியான் வண்டியும் விற்பனை செய்யப்படுகிறது. அது ரூ. 66,618 எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் விற்பனைக்கு கிடைக்கிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here