பச்சை மாங்காயின் பலன்கள்

0
202


மாங்காய் சாப்பிட்டால் உடல் வெப்பம் அதிகரிக்கும், பருக்கள் வரும் என்று பலரும் அதை வாங்கி சாப்பிடமாட்டார்கள். மாங்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உண்மையில் இதனை சாப்பிட்டால் நாம் சந்திக்கும் பல பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். மாங்காயை சாப்பிட்டால் பெறும் நன்மைகள் என்னவென்று தெரிந்துக் கொள்ளுங்கள் .

கோடையில் அதிகப்படியான வெப்பத்தால் உடலின் நீர்ச்சத்தை இழந்து, அதனால் உடல் வெப்பமடைந்து காய்ச்சல் அல்லது சில நேரங்களில் சுய நினைவை இழக்க நேரிடும். மாங்காயில் உள்ள சக்தி வாய்ந்த குளிர்மிக்க உட்பொருள், உடலில் நீர்ச்சத்தை சீராகப் பராமரித்து, இப்பிரச்னையைத் தடுக்கும்.

நெஞ்செரிச்சலுக்கு பச்சை மாங்காயை சாப்பிடுங்கள்.

மாங்காயில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது உடலில் எலக்ட்ரோலைட் அளவை பராமரிக்க உதவும் . இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்க உதவும் . இதய நோயின் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும்.

பச்சை மாங்காயில் ஆவியாகக் கூடிய உட்பொருட்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது செரிமான திரவத்தின் உற்பத்தியைத் தூண்டும் . செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கோடையில் வயிற்று பிரச்னைகளை வராமல் இருக்க மாங்காய் துண்டுகளை சாப்பிடுங்கள்.

பருவ நிலை மாற்றம் அல்லது ஏதேனும் வைரஸ் தொற்றுக்களால் உங்களுக்கு பிரச்சனை வருகிறது என்றால் பச்சை மாங்காயை சாப்பிடுங்கள். ஏனெனில் பச்சை மாங்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. 

பச்சை மாங்காய் கல்லீரல் சம்பந்தமான பிரச்னைகளைத் தடுக்கும். மாங்காய் குடலை பாக்டீரியா தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கும். மாங்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. மாங்காயை உட்கொண்டு வந்தால், இரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும் மற்றும் புதிய இரத்த செல்கள் உருவாகும்.

மாங்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொலாஜனின் கூட்டுச்சேர்க்கையில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆகவே மாங்காயை சாப்பிடுவதால் சருமத்தின் பொலிவு அதிகரிப்பதோடு, முதுமையும் தள்ளிப் போகும்.

பச்சை மாங்காயை துண்டுகளாக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின் அந்த நீரைக் கொண்டு இரவில் படுக்கும் முன் முகத்தைக் கழுவி, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ, முகப்பரு பிரச்னையில் இருந்து விடுபடலாம்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்