பச்சை என்பது விவசாயத்தைக் குறிக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும்போது கருப்புக் கொடி காட்டுவோம் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்திருந்தநிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பிரதமர் மோடிக்கு பச்சைக்கொடி காட்டுவோம் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், விவசாயத்தைக் குறிக்கும் வகையிலேயே பச்சைக்கொடி காட்டுவோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாகத் தெரிவித்தார். மேலும் அவர், தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: உலக தண்ணீர் தினம் : 84.4 கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்