உத்தரகாண்ட் சட்டசபையில் புதன்கிழமை பசுவை நாட்டின் தாயாக அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த தீர்மானம் இப்போது மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.

உத்தரகண்ட் அரசாங்கம் பசுக்களின் பாதுகாப்புக்காக செயல்படும், பசுக்களைக் கொல்வதை நாடு முழுவதும் தடை செய்யவேண்டும் என்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சர் ரேகா ஆர்யா தெரிவித்தார். பசுக்களை பாதுகாக்கும் விதமாக பசுவை நாட்டின் தாயாக அறிவிக்க்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றூம் கூறினார்.

மேலும் பேசிய அவர் பசுவின் மூத்திரம் மருத்துவ குணம் மிக்கது என்றும் மிருகங்களில் பசு மட்டும்தான் ஆக்ஸிஜனை சுவாசித்துவிட்டு ஆக்ஸிஜனை வெளிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் சிலர் பசுவை நாட்டின் தாயாக அறிவிப்பதால் என்ன பயன், பசுக்கள் சாலைகளில் சுற்றி திரிவதை தடுத்து நிறுத்துமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

உத்தரகாண்ட் காங்கிரஸ் தலைவர் பிரித்தம் சிங் இந்த தீர்மானம் நல்லது தான் அரசு பசுக்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Courtesy : Scroll.in

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்