பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்; திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு தீர்மானம்

Subba Reddy directed officials to frame guidelines for implementing the Gudiko Gomatha programme on a national scale.

0
211

பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக் கோரி திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறியதாவது:

தேவஸ்தானத்தின் 2021 – 22 ஆண்டுக்கு ரூ 2937.82 கோடியில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. பக்தர்களை ஏப்ரல் 14ம் தேதி முதல் ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் சேவைகளில் பங்கேற்க அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோ மாதா திட்டத்திற்கு நாடு முழுவதும் வரவேற்பு எழுந்துள்ளது. ஆகையால், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளோம். அதுதொடர்பாக கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here