நாட்டில் மத நல்லிணக்கம் மலர வேண்டுமென்றால் பசுவைத் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என அஜ்மீர் தர்கா ஆன்மீகத் தலைவர் தீவான் ஜெய்னுல் ஆபுதீன் அலிகான் கூறியுள்ளார்.

அஜ்மீரில் நடைபெற்ற விழாவொன்றில் பேசிய அஜ்மீர் தர்கா ஆன்மீகத் தலைவர் தீவான் ஜெய்னுல் ஆபுதீன் அலிகான், ”நாட்டில் மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்க வேண்டும். முஸ்லிம்களும் பசுவதைக்கு எதிராக முன் வரவேண்டும். மாட்டிறைச்சி உண்பதைத் தவிர்க்க வேண்டும். இன்றிலிருந்து நானும் எனது குடும்பத்தினரும் மாட்டிறைச்சி உண்ண மாட்டோம்” என கூறியுள்ளார்.

மேலும் அவர், ”இனவாத வெறுப்பு முக்கியக் காரணமாக இருக்கும் பசு உள்ளிட்ட விலங்குகள் வதை மற்றும் மாட்டிறைச்சி விற்பனை நிறுத்தப்பட வேண்டும். இதற்கு பசுவைத் தேசிய விலங்காக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். குஜராத்தில் பசுவைக் கொன்றால் ஆயுள் தண்டனை என்றும் கடத்தினால் 10ஆண்டு சிறை தண்டனை என்றும் சட்டத்திருத்தம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். பசுக்கள் மத நம்பிக்கையின் அடையாளம், அவற்றைப் பாதுகாப்பதை ஒவ்வொருவரும் தனது கடமையாக கருதவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : ”காவிகளின் பிடியில் இந்தப் பாவி”: ஓபிஎஸ்-ஐ வறுத்தெடுக்கும் நமது எம்ஜிஆர்

இதையும் படியுங்கள் : “மதவெறியை”ப் பரப்பி மக்களை ரத்தம் சிந்த வைக்கும் பத்திரிகைகள்

இதையும் படியுங்கள் : விளையாட்டில் ஊக்க மருந்து பயன்படுத்துவதில் இந்தியா 3வது இடம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்