பசுவின் கோமியத்தால் கேன்சரில் இருந்து குணமடைந்தேன் என்ற பிரக்யா சிங் அறுவை சிகிச்சை செய்தது அம்பலம்

0
455

பசுவின் கோமியத்தை குடித்ததால் கேன்சரில் இருந்து குணமடைந்தேன் என்று ஒரு தொலைக்காட்சியில் பேசிய போது பாஜகவின் போபால் தொகுதி வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூர் கூறியிருந்தார்.  அவர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில்  கேன்சருக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட தகவல் வெளியாகியுள்ளது.

 பிரக்யா சிங் தாக்கூர்  கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்ததால் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டார் என்று ராம் மனோகர் லோஹியா மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் , பொது மற்றும் ரத்த நாள அறுவை சிகிச்சை மருத்துவர் ராஜ்புத் உறுதிபடுத்தியுள்ளார். 2008-ஆம் ஆண்டு மும்பையின் ஜேஜே மருத்துவமனையில் பிரக்யாவுக்கு  முதன்முதலாக அறுவை சிகிச்சை செய்தேன். அப்போது அவரின் வலது மார்பகத்தில் கட்டி உருவாகி இருந்தது. 2012 இல் மீண்டும் அவருக்கு கட்டி உருவானது. 

அதனால் கட்டியோடு சேர்ந்து தாக்கூரின் வலது மார்பகத்தில் மூன்றில் ஒரு பங்கை அறுவை சிகிச்சை மூலம் நீக்கினோம். போபாலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் இரண்டாவது முறை அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

கேன்சர் கட்டி மற்றும் திசுக்கள் பரிசோதனைக்காக மும்பைக்கு அனுப்பப்பட்டது. அப்போது பிரக்யாவுக்கு  ஸ்டேஜ் – 1 கேன்சர் முற்றிய நிலையில் இருந்தது.

ஜாமீன் கிடைத்தவுடன் மீண்டும் ஓர் அறுவை சிகிச்சை  2017-இல் பிரக்யாவுக்கு நடத்தப்பட்டது என்று டாக்டர் ராஜ்புத் கூறியுள்ளார். ராம் மனோகர் லோஹியா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில்  அளிக்கப்பட்ட சிகிச்சையின்போது அவரின் இரு மார்பகங்களும் அகற்றப்பட்டன  என்று டாக்டர் ராஜ்புத் கூறியுள்ளார் .

பிரக்யா தாக்கூருக்கு கீமோதெரபியும் ரேடியேஷனும் வழங்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளிக்க மருத்துவர் ராஜ்புத் மறுத்துவிட்டார்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வழக்கமான பரிசோதனைக்காக பிரக்யா வந்ததாகவும் அப்போது அவரின் மருத்துவ அறிக்கைகள் அனைத்தும் சரியாக இருந்ததாகவும் கூறியுள்ளார் ராஜ்புத்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here