பசுவதை தடுப்புச் சட்டத்திற்கு எதிராக முகநூலில் பதிவிட்ட விரிவுரையாளர்… 2 ஆண்டுகளுக்கு பிறகு கைது

0
149

பழங்குடிகள் ஏன் இந்துக்களைப் போல் வாழ வேண்டும் என்று முகநூலில் கருத்து பதிவிட்டதால் ஏற்பட்ட விளைவு

 ஜீத்ராய் ஹன்ஸ்தா – ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி விரிவுரையாளர் . ஜாம்ஷெட்பூர், சாக்‌ஷியில் உள்ள அரசு பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரி ஒன்றில் புரிந்து வருகிறார். 2017ஆம் ஆண்டு ஆதிவாசிகளின் உரிமை குறித்தும், மாட்டிறைச்சி உண்பது குறித்தும் முகநூலில் பதிவிட்டுள்ளார்.  

அதற்கான அவர்  இந்திய தண்டனைச் சட்டம் 153A (இருதரப்பினருக்கு இடையே தேவையற்ற பதட்டமான சூழலை உருவாக்குதல்) , 295A (மற்ற மதத்தினரின் நம்பிக்கைகளை புண்படுத்தும் படி பேசுதல்), மற்றும் 505 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பகை மற்றும் வெறுப்பினை தூண்டும் படியாக அவர் பதிவு இருக்கிறது என்று அன்று சாக்‌ஷி காவல் நிலைத்தில் பணி புரிந்த அனில் குமார் சிங் என்பவர் புகார் அளித்திருந்தார் அதன் அடிப்படையில் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார் ஹன்ஸ்தா.

2017ம் ஆண்டு ஹன்ஸ்தா தன்னுடைய முகநூலில், ஜோஹர் தாங்கிரி மைதன் என்ற திருவிழாவின் போது மாடுகளை பலி கொடுத்து அதனை உணவாக உண்பது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் அது ஆதிவாசிகளின் உரிமை என்று குறிப்பிட்ட அவர், பசுவதை தடுப்புச் சட்டத்திற்கு எதிராகவும் கருத்து பதிவிட்டுள்ளார்.  அந்த கருத்தில் பழங்குடிகள் ஏன் இந்துக்களைப் போல் வாழ வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

புகார் பதிவு செய்த நாளில் இருந்து ஹன்ஸ்தா தலைமறைவாக இருந்ததால் தற்போது கைது அவரை கைது செய்துள்ளோம் என்று மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் அனூப் பிர்தரா கூறியுள்ளார். 

 ஏப்ரல் மாதத்தில் ஹன்ஸ்தாவின் முன்ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது என்று ஹன்ஸ்தாவின் வழக்கறிஞர் ஷதாப் அன்சாரி கூறியுள்ளார். மேலும் , காவல்துறையின் விளக்கத்தை மீண்டும் உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார். ஆதிவாசி மக்களின் வாக்குகளை பெற 2017 ஆம் ஆண்டு கைது பாஜக கைது செய்யவில்லை. 

ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது ஹன்ஸ்தா தரப்பு வழக்கறிஞர் “ஹன்ஸ்தா தன்னுடைய உணவு பழக்கவழக்கங்களையே குறிப்பிட்டார் என்றும், தன்னுடைய கலாச்சாரத்தினை பாதுகாக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது என்றும்” வாதிட்டுள்ளார்.

ஆனால் ஜாம்ஷெட்பூர் நீதிமன்றம், இது போன்ற கருத்துக்களை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கருத்துகளாக ஒரு போதும் எடுத்துக் கொள்ள இயலாது என்றும், இது போன்ற கருத்துகள் தேவையற்ற பிரச்சனைகளையும், பதட்டத்தையும் தான் உருவாக்குகிறது என்று கூறி முன் ஜாமீன் மனுவை நிராகரித்துவிட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here