ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

ஆலைக்கு சீல்வைக்கப்பட்டதை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் மனுதாக்கல் செய்ததையடுத்து நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. ஆலையை ஆய்வு செய்ய மேகாலய உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையைக் கொண்டு அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய தருண் அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை 48 கவர்களில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது. நீதிபதி தருண் அகர்வால் குழு ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ததை தொடர்ந்து ஸ்டெர்லைட் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here