ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து தேசிய பசுமைத் தீர்ப் பாயம் நியமித்துள்ள விசார ணைக் குழுவிடம், அந்த ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி சுமார் 4 லட்சம் மனுக்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) அளிக்கப்பட்டுள்ளன. இந்த மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் இன்றும் நடக்கிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் கடந்த மே மாதம் நடத்திய அமைதிப் பேரணியின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலை சார்பில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்வதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்தது. இக்குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து, பொதுமக்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார்கள் . அப்போது, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கோரி சிலர் மனு அளித்தனர். அவர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து, சென்னையில் உள்ள தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் கடந்த மாதம் 24-ஆம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் நடந்த விசாரணையின்போது, ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக வைகோ, நல்லக் கண்ணு, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங் கிணைப்பாளர் பாத்திமா பாபு உட்பட ஆயிரக்கணக்கானோர் மனு அளித்தனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் 2-வது முறையாக சென்னையில் நேற்று மீண்டும் நடந்தது. அப்போது, மக்கள் போராட்டக் குழு, வணிகர்கள் அமைப்பு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்டவை சார்பில் சுமார் 4 லட்சம் மனுக்கள் அளிக்கப்பட்டன. இதுதவிர, திமுக, மக்கள் நீதி மய்யம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பிலும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மனு அளிக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு புற்று நோய் ஏற்படுகிறது என்பதை எதிர்ப்பாளர்களால் அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடிய வில்லை. இந்த ஆலையால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும், இந்த ஆலையைத் திறக்கக்கோரி 1.10 லட்சம் பேர் அளித்துள்ள மனுக்களை விசாரணைக் குழுவிடம் சமர்ப்பித்துள்ளோம் என்று தூத்துக்குடி ஆலை நிர்வாகத்தின் தரப்பில் அதன் மக்கள் தொடர்பு அதிகாரி இசக்கியப்பன் கூறியுள்ளார்.

Courtesy : The New Indian Express

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here