பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. பசுப் பாதுகாவலர்கள் சட்டத்தைக் கையிலெடுக்க கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் எந்த விதமான வன்முறைச் சம்பவங்களையும் அனுமதிக்க முடியாது என்றும், வன்முறை நிகழ்ந்தால் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மக்களிடையே அச்சம் நிலவினால் அதனை தீர்க்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களை தடுக்க சட்டம் கொண்டு வரலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் சட்டத்தைக் கையிலெடுக்க யாருக்கும் உரிமையில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here