சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் அனைவரையும் அவர்கள் வழியிலேயே நடத்தப்படுவார்கள் என உத்தரப்பிரதேச மாநிலத்தின் புதிய காவல் தலைமை அதிகாரி சுல்கான் சிங் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : டிரம்ப் அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்ட 2வது இந்தியர்

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், புதிய காவல் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட சுல்கான் சிங், ”குற்றவாளிகள், அரசியல்வாதிகள் மற்றும் பசு காவலர் அமைப்பைச் சேர்ந்தவார்கள் சட்டத்தை மீறினால் அவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கக்கூடாது” என எச்சரித்துள்ளார். சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் நியமனச் செய்யப்பட்ட ஜாவித் அகமதின் பதவிக்கு புதிதாக வந்துள்ள சுல்கான் சிங் முதல் நாளிலேயே சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : ’முத்தலாக்’: ’பெண் குழந்தை பிறந்ததற்காக கணவர் என்னை மிரட்டுகிறார்’

இது குறித்து பேசிய சிங், ”சட்டத்தை மீறுபவர் யாரானாலும் அவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என எண்ணகூடாது. அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் யோகி உத்தரவிட்டுள்ளார். சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் அனைவரையும் அவர்கள் வழியிலேயே நடத்தப்படுவார்கள். பசுக் காவலர்கள் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவதற்கு எந்த உரிமையும் இல்லை. எந்தவொரு காரணமும் இன்றி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்கும். மேலும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண்பிக்கும் பொதுமக்களின் விவரங்கள் வெளியிடப்படாது, அவர்களின் பாதுகாப்பு கருதி ரகசியமாக வைக்கப்படும். மேலும், காவல்துறையினருக்கு தங்கள் பணியைச் செய்ய முழு சுதந்திரம் வழங்கப்படும்” என கூறினார். சுல்கான் சிங்கின் பேச்சு, கண் துடைப்பா அல்லது மக்கள் மீதான அக்கறையா என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்

இதையும் படியுங்கள் : செல்லூர் ராஜூவின் ரப்பர் பந்துகள் ஐடியா

இதையும் படியுங்கள் : ‘இனிவரும் காலங்களில் சத்யராஜ் கவனமாக பேச வேண்டும்’

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்