பசுக் காவலர்களின் வன்முறையைத் தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? உச்சநீதிமன்றம் கேள்வி

0
441

பசு காவலர்களின் வன்முறையைத் த்டுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும் அதை செயல்படுத்தாத ஹரியானா, ராஜஸ்தான்,
உத்தரப்பிரதேச மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. வரும் ஏப்ரல் 3ம் தேதிக்குள் ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் அதிகாரிகள் நியமிக்காதது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த 3 மாநிலங்களிலும் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

பசு காவலர்கள் பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பல்வேறு மாநிலங்களில் அப்பாவி மக்கள் மீது வன்முறைகளை செய்து வந்தனர். ராஜஸ்தான், உத்தரப்பிரதேச மாநிலங்களில் மாடுகளை விற்பனைக்காக கொண்டு சென்ற விவசாயிகள் கூட அடித்துக் கொல்லப்பட்டனர்.

இதையும் படியுங்கள்: கடந்த 6 ஆண்டுகளில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் எத்தனை?

இதையடுத்து பசு காவலர்களின் வன்முறையை கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறி மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ந்தேதி 26 மாநிலங்களும் சட்ட ஒழுங்கை பராமரித்து பசு காவலர்களின் வன்முறைகளைத் தடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

.இந்த உத்தரவின்படி அனைத்து மாநிலங்களும் பசு காவலர்களின் வன்முறைகளைத் தடுக்க அதிகாரிகளை நியமித்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல்ஹ ஹரியானா,உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் அரசுகள் அதிகாரிகளை நியமித்தது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் அளிக்கவில்லை.

இதையடுத்து, துஷார் காந்தி சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வரும் ஏப்ரல் 3ம் தேதிக்குள் ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அரசுகள் பசு காவலர்களின் வன்முறையைத் த்டுக்க நடவடிக்கை எடுக்காதது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here