உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாகரில் நடந்த வன்முறையின்போது பசுக்குண்டர்களால் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் இந்து மத விவகாரங்களுக்கு பெரிய இடையூறாக இருக்கிறார், அவர் இந்து மத விரோதி என்று அவரைப் பற்றி உள்ளூர் பாஜகவினர் 3 மாதங்களுக்கு முன்பாக எழுதிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது .

புலந்த்சாகரில் நடந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த நிலையில் இந்தக் கடிதம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

அந்தக் கடிதத்தில், “சுபோத் குமார் சிங் இந்து மதப் பண்டிகைகளுக்கு விரோதமாக கடும் இடையூறுகள் செய்கிறார், பசுவதை, பசு திருட்டு ஆகியவை அதிகாமகியுள்ளது . இதனால் இந்துக்கள் இவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர். ஆகவே இவரையும் இன்னொரு உள்ளூர் போலீஸையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் , இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை அவசியம் எடுக்க வேண்டும்” என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது அனைத்து உள்ளூர் பாஜக தொண்டர்களின் கோரிக்கையாகும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலந்த்சாகர் பாஜக நகர பொதுச் செயலாலர் சஞ்சய் ஷ்ரோதியா,இந்தக் கடிதம் எழுதியது உண்மைதான் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறீயுள்ளார். சுபோத் குமார் சிங் தேவையில்லாமல் மக்களுக்கு தண்டனை விதிக்கிறார். ஹெல்மெட் போடவில்லை எனில் அபராதம் கேட்கிறார், நகரத்துக்குள் ஹெல்மெட்டெல்லாம் தேவைஇல்லை, நெடுஞ்சாலையில்தான் ஹெல்மெட் போட வேண்டும், ஆனால் இவர் தொந்தரவு கொடுத்தார். ஆனால் அவர் நாங்கள் சொல்வதைக் கேட்பதில்லை என்றும் கூறினார்.

மேலும் சுபோத் சிங் இந்து மத நிகழ்ச்சிகளுக்கு இடையூறு விளைவித்தார். இது எங்களுக்கு வெறுப்பு அளித்தது. அதனால்தன இவரை இடமாற்றம் செய்யுமாறு உள்ளூர் எம்.பி.க்கு கடிதம் எழுதினோம் என்று புலந்த்சாகர் பாஜக நகர பொதுச் செயலாலர் சஞ்சய் ஷ்ரோதியா கூறியுள்ளார்.

Courtesy : The Telegraph

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்