ராஜஸ்தான் மாநிலம் ஆல்வர் மாவட்டத்தில் பசுக்களை ஏற்றிச் சென்ற முஸ்லிம் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (நேற்று), உமர்கான் என்பவர் தனது உதவியாளர் தாஹிர் கான் என்பவருடன், பசுக்களை ஏற்றிக்கொண்டு, பாரத்பூர் மாவட்டம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது, உமர்கானின் வாகனத்தை வழிமறித்த பசுக் காவலர்கள், அவரையும், அவரது உதவியாளரையும் கடுமையாகத் தாக்கினர். மேலும் உமர்கானை, துப்பாக்கியாலும் சுட்டனர். இதில் அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக ராம்வீர் குர்ஜார் மற்றும் பஹ்வான் குர்ஜார் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்தனர்.

alwar

இது குறித்து பேசிய காவல்துறை அதிகாரி அனில் பென்வால், இந்தக் கொலைச் சம்பவத்தில் நான்கு பேர் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்ததாகவும், இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்