பசிக் கொடுமையால் குழந்தைகள் மண்ணைத் தின்ற அவலம் ; காப்பகத்தில் சேர்க்கப்பட்ட குழந்தைகள்

0
335

திருவனந்தபுரத்தில் வறுமை காரணமாக, பசியினால் குழந்தைகள் மண்ணை அள்ளித் தின்ற கொடுமை நடந்துள்ளது. குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாததால் குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவி என்பவர் அங்குள்ள ரயில்வே புறம்போக்கு நிலத்தில் தற்காலிகக் கூடாரத்தில் வசித்து வருகிறார். இவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். ஆனால், சம்பாதிக்கும் பணத்தை மதுபானம் வாங்குவதிலே செலவழித்து இருக்கிறார். குழந்தைகளின் உணவுக்கு கூட பணம் கொடுக்காததால் பசியில் குழந்தைகள் மண்ணை அள்ளித் தின்ற வீடியோ சமுகவலைத்தளங்களில் பரவியது. 

 மாவட்ட நிர்வாகம், ஸ்ரீதேவியை சந்தித்து தேவையான உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளது. தன்னார்வலர்களும் நேரில் சந்தித்து தேவையான பொருட்களை வழங்கியுள்ளனர்.

குழந்தைகள் நலக் குழு  4 குழந்தைகளை மீட்டு, காப்பகத்தில் சேர்த்துள்ளது. எஞ்சியுள்ள 2 குழந்தைகளுக்கு தாயின் உதவி தேவைப்படுவதால் தாயுடன் அந்த குழந்தைகள் மாநில அரசின் கீழ் இயங்கும் ஒரு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோன்று ஸ்ரீதேவிக்கு மாநகராட்சியின் அலுவலகத்தில் வேலைக்கான நியமனக் கடிதத்தை மேயர் ஸ்ரீகுமார் வழங்கியுள்ளார். 

விரைவில், அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அவருக்கு வீடு ஒன்று கட்டிக் கொடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோன்று குழந்தைகளின் கல்விக்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here