மதம் கடந்து மக்களைக் காப்போம் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர், விவசாயிகள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நடிகர் கமல்ஹாசன், தனக்கு நெருங்கிய உறவு உண்டு என்றார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (இன்று) அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ”அகில இந்திய விவசாயிகள் கட்சி, வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி. இனியும் சேராதிருப்போர் சேர்க. இது மிக முக்கியமான மக்கள் குரல். பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயமும்தான். மதம் கடந்து மக்களைக் காப்போம். மக்களே மையம். வாழிய பாரதம்.” என விவசாயிகளுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.

kamal

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்