மார்வெல் நிறுவனம் ’ஸ்பைடர்மேன்’ படங்களை இனி தயாரிக்கப் போவதில்லை என்று அறிவித்திருப்பது ஏமாற்றமளித்திருப்பதாக சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு டிஸ்னி மற்றும் சோனி நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அதன்படி ஸ்பைடர்மேன் திரைப்படங்களை இவ்விரு நிறுவனங்களும் தயாரித்து வெளியிட்டுவந்தன. இதில் வரும் லாபத்தை இரு நிறுவனங்களும் பகிர்ந்து கொண்டன. 

சோனி நிறுவனம் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தின் திரை உரிமையை தன்வசம் வைத்துள்ளது. இந்நிலையில்இத்திரைப்படங்கள் தயாரிப்பு குறித்து டிஸ்னி மற்றும் சோனி நிறுவனங்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து #SaveSpiderMan என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டானது.

இரு நிறுவனங்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அடுத்து, ஸ்பைடர்மேன் படங்களை இனி தயாரிக்கப் போவதில்லை என்று மார்வெல் தலைவர் கெய்ன் பெய்ஜ் அறிவித்துள்ளார். கெய்னின் முடிவு ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்துள்ள சோனி நிறுவனம், இருந்தாலும் அவரது முடிவுக்கு மதிப்பளிக்கிறோம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலக அளவில் ஸ்பைடர்மேன் திரைப்படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் வாரிக்குவித்தன. டிஸ்னியின், மார்வெல் காமிக்ஸ் புத்தககதாபாத்திரமான ஸ்பைடர்மேனை அப்படியே கண் முன்கொண்டு வந்தார் நடிகர் டாம் ஹாலண்ட்.

இந்நிலையில், ஸ்பைடர்மேன் திரைப்படங்கள் இனி வெளிவராது என்று கூறப்படுகிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here