பங்குச் சந்தை வீழ்ந்தது ஏன்?

1
672

சர்வதேச பங்குச் சந்தைகளில் காணப்படும் ஸ்திரத் தன்மையற்ற சூழல் இந்திய பங்குச் சந்தைகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தின. வார தொடக்கத்தின் முதல் நாளே சென்செக்ஸ் 1700 புள்ளிகள் வரை சரிந்தும், நிஃப்டி 500 புள்ளிகள் வரை சரிந்தும் முதலீட்டாளர்களை கலக்கமடையச் செய்துள்ளன. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 66.70 ஆக உள்ளது.

உலக பொருளாதாரத்தில் நிலவும் மந்த நிலை சீனாவின் ஏற்றுமதியை பாதித்தது. இதனையடுத்து சீன அரசு தன் நாட்டின் பண மதிப்பை இரண்டு சதவீதம் குறைத்தது. இந்த முடிவு சீன ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. சீன அரசின் இந்த அதிரடி முடிவால் மற்ற நாடுகளின் பண மதிப்பு சரியத் தொடங்கியுள்ளது. இந்திய பங்குச் சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்களும் தங்கள் கைவசமிருந்த அதிக அளவிலான பங்குகளை விற்று வெளியேறினர். மேலும் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவிய அச்ச உணர்வும் தான் பங்குச் சந்தைகள் சரியக் காரணம்.

கடந்த வார நட்களில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரையிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 280 புள்ளிகள் வரையிலும் சரிந்தன. ஆனால் திங்கட்கிழமையன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1625 புள்ளிகள் சரிந்து 25,741 புள்ளிகளுடனும், நிஃப்டி 491 புள்ளிகள் வரை சரிந்து 7,809 புள்ளிகளுடனும் வர்த்தகம் நிறைவு பெற்றது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 39.35 டாலராக உள்ளது. சென்செக்ஸ் கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 21ல் 1408 புள்ளிகளும், அதே ஆண்டு அக்டோபர் 28ல் 1070.63 புள்ளிகளும் சரிந்தன. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சென்செக்ஸ் திங்கட்கிழமையன்று ஒரே நாளில் 1625 புள்ளிகள் சரிந்துள்ளது.

* மொத்த இழப்பு சுமார் ஏழு லட்சம் கோடி ரூபாய்
* நிஃப்டியில் பட்டியலிடப்பட்ட 50 நிறுவனங்களில் 49 நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன
* சென்செக்ஸில் பட்டியலிடப்பட்ட 30 நிறுவனங்களின் பங்குகளும் சரிவைக் கண்டன
* இன்றைய மொத்த வர்த்தகத்தின் மதிப்பு 27,890.41 கோடி ரூபாய்
* பத்து சதவீதத்துக்கும் மேலாக சரிவைச் சந்தித்த பங்குகள் டாடா ஸ்டீல், கெயில், ஓ.என்.ஜி.சி, வேதாந்தா

பொருளாதார சீர்திருத்தத் திட்டங்களின் நிலை?

பிரதமர் நரேந்திரமோடியின் பொருளாதார சீர்திருத்தத் திட்டங்களின் மீது தற்போதைய சூழல் எந்த அளவுக்கு தாக்கத்தை உண்டு பண்ணும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. மோடி தலைமையிலான மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும் மசோதாவை அமலுக்கு கொண்டு வர பெரிதும் முயற்சிக்கிறது. ஆனால் முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதனை கடுமையாக எதிர்த்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளின் ஆதரவை தீவிரமாக திரட்டி வருகிறார். நிலம் கையகப்படுத்தும் மசோதா நிறைவேறினால் அந்நிய முதலீடுகள் அதிகமாக வரும். அதன் மூலம் பொருளாதாரம் வலுப்படும் என எதிர்பார்த்த பிரதமர் மோடிக்கு தற்போதைய சூழலில் முதலீட்டாளர்களின் அச்சம் பெரிதும் சவாலாக இருக்கும்.

1 கருத்து

  1. This piece of article is very informative and cracks the nut shell nitty gritty of understanding of corporate commodity industry. It espouses the “why” factor of the share market and its realms are easily understandable. The writer has consolidated the news and has assimilated by a cognitive analysis ultimately culminating as an understable news item on share…. Keep going sir…….Deepak

ஒரு பதிலை விடவும்