பக்கோடா விற்பதும் வேலைதான் என்று சொன்ன மோடிக்கு ப.சிதம்பரத்தின் பதில்

0
969

பிரதமர் மோடி ஒரு நேர்காணலில், “பக்கோடா விற்பனை செய்து நாள் ஒன்றுக்கு ரூ.200 சம்பாதிப்பவர்கூட வேலை செய்யும் நபரே” என்று கூறியிருந்தார். இதனை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துகளை கூறியிருந்தனர் .

இதை குறிப்பிட்ட முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடி, பக்கோடா விற்பதும் ஒரு வேலை என்று கூறியிருக்கிறார். பிரதமரின் சொல்படி பார்த்தால் பிச்சை எடுப்பதையும் ஒரு வேலையாக கருதலாம்தானே. வேறு வழியே இல்லாமல் பிச்சை எடுக்கும் ஏழை மக்களையும் , பிச்சை எடுக்கும் மாற்று திறனாளிகளையும் வேலை பார்ப்பவர்களாக நாம் கருதலாமா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலடி கொடுத்த பாஜக, அதன் டிவிட்டர் பக்கத்தில், “காங்கிரஸ் கட்சி ஏழைகளையும் கனவுகளோடு இருக்கும் இந்தியர்களையும் அவமானப்படுத்திவிட்டது. எளிமையான பின்னணியில் இருந்துவந்து கடினமாக உழைக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களை பிழைப்புக்காக பிச்சை எடுப்பவர்களுடன் ஒப்பிட்டுவிட்டது என்றும் காங்கிரஸ் கட்சி எப்போதுமே ஏழைகளின் விரோதி என்று உறுதிப்படுத்தியிருக்கிறது” என்று குறிப்பிட்டது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அடுத்தடுத்து பல டிவீட்டுகளை பதிவு செய்த ப.சிதம்பரம்,
“ஒரு விஷயத்தைத் திரித்து சொல்வதிலும் அதை வைத்து மோசடி செய்வதிலும் பாஜகவே தலைமை வகிக்கிறது. பகோடா விற்பது என்பது ஓர் ஏழை தனக்காக ஏற்படுத்திக் கொள்ளும் கவுரவமிக்க சுய தொழில். அதை ஒரு வேலையாகக் கருத முடியாது.” என்று குறிப்பிட்டார் .

முத்ரா கடன் மூலம் பெறப்படும் ரூ. 43,000 (சராசரி கடன் அளவு) முதலீட்டில் புதிய வேலை ஒன்று உருவாகும் என்று கூறப்பட்டது . ரூ. 43,000 முதலீட்டில் புதிய வேலை ஒன்றை உருவாக்கிய ஒரு நபரை என்னிடம் காட்டுங்கள்” என்று முத்ரா வங்கிகள் மற்றும் சிறுகடன்கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளதாக கூறுவதையும் பாஜக நிரூபிக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டார் .

கடந்த மூன்று ஆண்டுகளில் நிரந்தரமான, பணிப்பாதுகாப்பு தரக்கூடிய எத்தனை வேலைகளை இளைஞர்களுக்கு பாஜக அளித்துள்ளது எனக் குறிப்பிட முடியுமா? வேலை என்பதற்கும் சுயதொழில் என்பதற்கும் இடையே
உள்ள வித்தியாசம் குறித்தே ஒரு விவாதம் நடத்தத் தேவையிருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி : NDTV

இதையும் படியுங்கள்: 4 நீதிபதிகளின் போர்க்கொடி : என்ன செய்யப் போகிறது மோடி அரசு? – அ.மார்க்ஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here