புதுச்சேரியில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பக்கோடா விற்கும் போராட்டத்தை அம்மாநில முதல்வர் நாராயணசாமி நடத்தினார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில பாஜகவினர் அல்வா கடை திறந்து விற்பனையில் ஈடுபட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில், பக்கோடா விற்பனை செய்தால்கூட நாளொன்றுக்கு 200 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்றும், பக்கோடா விற்பதும் வேலை வாய்ப்புதான் எனவும் கூறியிருந்தார். அவரின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். பெங்களூருவில் பிரதமர் மோடி கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தின் அருகே, பட்டதாரி இளைஞர்கள் பக்கோடா விற்று தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

congress

அதேபோன்று, புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் பக்கோடா விற்கும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அம்மாநில பாஜகவினர் அல்வா கடை திறந்து போராட்டம் நடத்தினர். புதுச்சேரி நேரு சாலையில் நாராயணசாமி என்ற பெயரில் அல்வா கடை திறந்து பாஜகவினர் விற்பனை செய்தனர்.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்