பக்கவிளைவுகள் இருந்தும் பெண்களுக்கான புதிய வயாகராவுக்கு அனுமதி அளித்தது FDA

Vyleesi is an injection to be taken 45 minutes before sex and not more than eight times a month.

0
421

5 வருடங்களில் 2 வது முறையாக, பெண்களுக்கான வயாகராவின்  மற்றுமொரு பதிப்பு வெளியாகவுள்ளது.   

கடந்தவாரம் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து இயக்குனரகம் US Food and Drug Administration (FDA) பெண்களுக்கான வயாகராவுக்கு அனுமதி அளித்துள்ளது 

பெண்களுக்கான வயாகராவின் பெயர் வீலீசி (Vyleesi), இந்த மருந்தை ஊசி வழியாக செலுத்த வேண்டும் . இதற்கு முன்னர் பெண்களுக்காக உருவாக்கப்பட்ட வயாகராவின் பெயர் அட்டி (Addyi ) தினமும் உபயோகபடுத்தலாம் , அல்லது எப்போது தேவையோ அப்போது உபயோகப்படுத்தலாம். 

உடலுறவு கொள்வதற்கு 45 நிமிடத்திற்கு முன்னால் வீலீசி மருந்தை வயிற்றில் அல்லது தொடையில் ஊசி வழியாக செலுத்த வேண்டும். மேலும் இந்த மருந்தை 24 மணி நேரத்தில் ஒரு முறைதான் பயன்படுத்த வேண்டும் ; ஒரு மாதத்தில் 8 முறைதான் பயன்படுத்த வேண்டும்.  

பாலடின் டெக்னாலஜிஸ் அண்ட் எஎம்எஜி பார்மாசூட்டிகல்ஸ் (Palatin Technologies and AMAG Pharmaceuticals ) தயாரித்திருக்கும் வீலீசி செப்டம்பர் மாதம்முதல் குறிப்பிட்ட மருந்தகங்களில் கிடைக்கும். ஒரு டோஸின் (dose) விலை இன்னமும் அறிவிக்கப்படவில்லை. 

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து இயக்குனரகம்  (FDA) இந்த மருந்துக்கு பச்சைக் கொடி காட்டியிருந்தாலும் அதிக ரத்த அழுத்தம் ,  இருதய நோய் உடையோர், இருதய நோய் ஏற்பட அதிக வாய்ப்புக் கொண்டோர் இந்த மருந்தை உபயோகிக்கக் கூடாது என்று கூறியுள்ளது. கருவுற்றிருந்தால் இந்த மருந்தை உபயோகிக்கக் கூடாது என்று கூறியுள்ளது. கரு உருவானவுடன் இந்த மருந்தை நிறுத்திவிட வேண்டும் என்றும் FDA அறிவுறுத்தியுள்ளது.  

இந்த மருந்து சோதனையில் (clinical trials ) இருந்தபோது பக்கவிளைவுகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. இந்த மருந்தை உட்கொண்டதால் 40 சதவீத பெண்களுக்கு குமட்டல் ஏற்பட்டது. 18 சதவீத பெண்கள் இந்தச் சோதனையில் இருந்து விலகிக் கொண்டார்கள். 

FDA தனது அறிக்கையில் பாலியல் (sex) செயல்திறனை அதிகரிக்காது இந்த வீலீசி என்று கூறியுள்ளது. மேலும்  மருந்து சோதனையில் இருந்தபோது இந்த மருந்தை உபயோகித்த 1 சதவீத பெண்களுக்கு பல் ஈறுகள், தோலின் சில பகுதிகள், முகம், மார்பகங்கள் கறுத்து போனது என்றும் அவை நீங்கவில்லை என்றும் கூறியுள்ளது. 

செக்ஸில் நாட்டமில்லாத பெண்களுக்கு இந்த மருந்து உதவும் என்றும் இதன் வருடாந்திர விற்பனை 1 பில்லியன் டாலராக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

வீலீசியின் வேதியியல் பெயர்  bremelanotide, மூளையின் பாதைகளில் செயல்பட்டு செக்ஸில் நாட்டத்தைத்  தூண்டச் செய்யும் .  மாதவிடாய் நிற்பதற்கு முன்னால் பெண்களுக்கு குறையும் செக்ஸ் நாட்டத்தை (hypoactive sexual desire disorder (HSDD) சரி செய்யும். 

நோயாளிகளுக்கு வேறொரு மருந்தைக் கண்டுபிடித்துக் கொடுத்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று டாக்டர் ஜீலி கிராப் , எஎம்எஜி பார்மாசூட்டிகல்ஸ் -இன் முதன்மை மருத்துவர் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார். 

(hypoactive sexual desire disorder (HSDD) நோயால் பலர் பாதிக்கபட்டுள்ளனர். அவர்கள் எதையும் வெளியே கூறாமல் இருந்து வந்தனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவருக்கு இது குணபடுத்தக் கூடிய நோய் என்று தெரியாமல் இருந்திருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். 

அமெரிக்க பாலியல் சுகாதார துறையின் அறிக்கை  10 பெண்களில் 1 பெண் இந்த hypoactive sexual desire disorder (HSDD) நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறுகிறது. 

வியாபார உத்தியின் ஒரு பகுதியாக  எஎம்எஜி பார்மாசூட்டிகல்ஸ் unblush.com

என்ற தளத்தினை உருவாக்கியுள்ளது. செக்ஸில் நாட்டமின்மையை வெளியே சொல்ல வெட்கப்பட வேண்டாம் என்று கூறுகிறது இந்தத் தளம் .  

தேசிய மகளிர் சுகாதார அமைப்பு இந்த மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்று பெண்களிடம் அறிவுறுத்தியுள்ளது. இந்த மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து முழுவதுமாக தெரிந்த பிறகு பயன்படுத்துங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளது.  

செக்ஸில் நாட்டமின்மை க்கு பல விதமான சிகிச்சைகள் இருக்கின்றன. செக்ஸில் நாட்டமின்மை படுக்கையில் மட்டும் பிரச்சனை ஆகாது, இந்த நோய்  கவலையை உண்டாக்கும், ஆயுளைக் குறைக்கும், சுயமரியாதை பிரச்சனைகளை ஏற்படுத்தும், உறவில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று அனிதா கிளேடன்  , வெர்ஜீனியா மருத்துவ பல்கலைக்கழகத்தின் , மருந்துகள் பாதுகாப்புத் துறையின் தலைவர் கூறியுள்ளார்.  

2015 ஆம் ஆண்டு FDA பெண்களுக்கான வயாகரா அட்டி Addyi (flibanserin) -க்கு ஒப்புதல் கொடுத்தது. தினமும் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியது . 

அட்டி Addyi (flibanserin) -யின் தயாரிப்பாளர் Sprout Pharmaceuticals , இந்த மருந்தின் அட்டையில் பக்க விளைவுகள் பற்றி குறிப்பிட வேண்டியிருந்தது. குறிப்பாக இந்த மருந்தை மதுவுடன் உட்கொண்டால் என்னவாகும் என்று குறிப்பிட வேண்டியிருந்தது. 

இந்த எச்சரிக்கையைத் தவிர இந்த மருந்தை சான்றளிக்கப்பட்ட மருத்துவர்களும், மருந்தகங்களும் மட்டுமெ கொடுக்க முடியும். அட்டி Addyi -யை FDA இரு முறை பாதுகாப்பு காரணங்களுக்காக நிராகரித்தது . குறைந்த ரத்த அழுத்தம் கொண்டோர் இந்த மருந்தை எடுத்துக் கொண்டால் திடீரென்று அல்லது நீண்ட நேரம் நினைவிழக்கச் செய்யும் .  

வீலீசி Vyleesi -யை மதுவுடன் எடுத்து கொள்ளலாம். தாங்கக் கூடிய பக்க விளைவுகள் ஏற்படுகிறது, தினமும் எடுத்துக் கொள்ள வேண்டாம் அட்டி Addyi -யுடன் ஒப்பிடும்போது பல நன்மைகள் இருக்கிறது  என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.    

 அட்டி Addyi – யை தயாரித்தவர்களுக்கு எதிர்பார்த்த லாபத்தை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்று முதலீட்டு ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

thewire.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here