கடந்த இரு தினங்களாக சமந்தா குறித்து தெலுங்கு மீடியாவில் ஒரு செய்தி உலவி வருகிறது. சமந்தா கர்ப்பமாக இருக்கிறார் என்பதுதான் அந்த செய்தி. சமந்தா சொல்லாமல் இதனை மீடியாக்கள் எப்படி கண்டுபிடித்தன? அது ஒரு வேடிக்கை கதை.

தென்கொரிய படமான மிஸ் கிரானியை ஓ பேபி என்ற பெயரில் தெலுங்கில் எடுத்துள்ளனர். சமந்தா நாயகி. இருபது வயது மற்றும் எழுபது வயது என இரு வேடங்களில் சமந்தா நடித்திருக்கும் மாறுபட்ட கதையிது. ஜுலை 5 படம் திரைக்கு வருகிறது.

இந்நிலையில் சமந்தா தனது ட்விட்டர் கணக்கில் தனது பெயரை பேபி அக்கினேனி என்று மாற்றினார். பேபி என்று மாற்றியதால் பேபி ஃபார்ம் ஆகியிருக்கும் என்று புலனாய்வு புலிகள் துப்பறிந்து, சமந்தா கர்ப்பம் என்று எழுதினர். ஓ பேபி படம் வெளிவர இருப்பதால் பெயரை மாற்றியதாக கர்ப்ப வதந்தியை கருவிலேயே கலைத்திருக்கிறார் சமந்தா.

மீடியாக்களின் ஆர்வக்கோளாறுக்கு அளவேயில்லையா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here