இந்தியாவில் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரியுடன் வருகிறது.

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன், நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட பதிப்பாக வெளிவந்துள்ளது.

நோக்கியா 8.1 சிறப்பம்சங்கள்:

ஆண்ட்ராய்டு 9.0 (பை) யில் இயங்கும் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனில் 6.18 இன்ச் ஃபுல் ஹெச் டி பிளஸ் 18:7:9 ரக ப்யூர் டிஸ்ப்ளே(கார்னிங் கொரில்லா கிளாஸ் 3), ஸ்னாப்டிராகன் 710 10 என் எம் பிராசஸர், அட்ரினோ 616 GPU, ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 12 எம்.பி. பிரைமரி கேமரா ZEISS ஆப்டிக்ஸ், சோனி IMX363 சென்சார், f/1.8, OIS, 13 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

4 ஜிபி ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜிபி மெமரி என இரு வெரியண்ட்களில் வருகிறது. மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது.

கேமரா சென்சார்களுடன் ஏ.ஐ சீன் டிடெக்ஷன் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் புகைப்படங்களை 18 விதங்களில் மாற்றிக் கொள்ளலாம். இத்துடன் செல்ஃபிக்களை எடுக்க 20 எம்.பி. கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி கேமராவுடன் ஏ.ஐ பியூட்டி மற்றும் ஏ.ஐ போர்டிரெயிட் மோட், 6 ஏ.ஐ ஸ்டூடியோ லைட்கள் மற்றும் டூயல்-வியூ மோட் வழங்கப்பட்டிருக்கிறது.

புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் 6 சீரிஸ் அலுமினியம்-மக்னீசியம் அலாய் ஃபிரேம், கிளாஸ் பேக் கொண்டிருக்கிறது. இதன் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் பின்புறம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 3500 எம்.ஏ.ஹெச் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன் 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது.

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் இந்தியாவில் ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளாக்/சில்வர், ஐயன்/ஸ்டீல் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here