நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன் நோக்கியா 8.1 நவம்பர் 28ம் தேதி இந்தியாவில் வெளியாக உள்ளது. நோக்கியா X7 போனின் இந்திய வெர்ஷன் தான் இந்த நோக்கியா 8.1 ஆகும்.
இதன் விலை தோராயமாக ரூபாய் 23,999 இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

நோக்கியா X7 நோக்கியா 7.1ஆக ரீ – ப்ராண்ட் செய்யப்பட்டது. ஆனால் அந்த பெயரை மறுபடியும் நோக்கியா 8.1 மாற்றி சர்வதேச சந்தைகளுக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது எச்.எம்.டி நிறுவனம்.
நோக்கியா 8.1 என்ற பெயரை பரிந்துரை செய்தவர் தலைமை ப்ராடக்ட் அலுவலர் ஜூஹோ சர்விகாஸ் ஆவார்.
இந்த போன் கூகுளில் ஆகுமெண்ட்டட் ரியாலிட்டி ப்ளாட்ஃபார்மான கூகுள் ARCore ( Google ARCore ) – ஐ சப்போர்ட் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
colors-e1539690905269
நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனின் (Nokia 8.1 Smartphone) சிறப்பம்சங்கள்
*
* 6.18 இன்ச் அளவுள்ள ஃபுல் ஹெச்.டி திரை கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது நோக்கியா 8.1
.ப்யர்டிஸ்பிளே தொழில்நுட்ப உதவியுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த திரையின் அஸ்பெக்ட் ரேசியோ 18.7:9 ஆகும்.
* இதன் கேமராக்கள் சற்று வியக்க வைக்கும் அளவிற்கு பொருத்தப்பட்டிருக்கிறது. பின்பக்க இரட்டைக் கேமராக்களின் செயல் திறன் 13 எம்.பி மற்றும் 12 எம்.பி ஆகும்.
* செல்பி கேமராவின் செயல் திறன் 24 எம்.பி. ஆகும்
* ஆண்ட்ராய்ட் 9 பை இயங்குதளத்தில் இயங்கும் இந்த போனில் ஆக்டா கோர் ஸ்நாப்ட்ராகன் ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
* 4ஜிபி RAM மற்றும் இதன் விலை ரூ. 23,999 ஆகும்.


(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )